1971ஆம் ஆண்டு பாகிஸ்தான் படைகளால் அழிக்கப்பட்டு 50 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ராம்னா காளி மந்திரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்தார்என்று வெளியுறவுச் செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.
1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து வங்காளதேசம் சுதந்திரம் அடைந்ததன் பொன்விழா கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது முதல் அரசு முறை பயணமாக வங்கதேசத்திற்கு வந்துள்ளார். இதன் ஒரு நிகழ்வாக அவர் இந்த கோவிலைத்திறந்து வைத்துள்ளார்.