தப்லிக் ஜமாத்தை முழுமையாகத் தடை செய்ய வேண்டும் தாருல் உலூம் தியோபந்த், பிஎஃப்ஐ மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் கோரிக்கை விடுத்துள்ளது.
தில்லியில் உள்ள நிஜாமுதீன் மர்கஸ் கட்டிடம் மற்றும் அதனுடன் தொடர்புடைய வங்கிக் கணக்குகள் சீல் வைக்கப்பட வேண்டும் என்றும், அதன் “பொருளாதார ஆதாரங்கள் மற்றும் ஆதாரங்கள்” கண்டறியப்பட்டு முடக்கப்படவேண்டும், மேலும் தாருல் உலூம் தியோபந்த், பிஎஃப்ஐ மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விஎச்பி கோரிக்கை விடுத்துள்ளது.
“தப்லிக் ஜமாத் மற்றும் அதன் நிஜாமுதீன் மார்க்கஸின் அத்துமீறல்களால் பாரதம் மட்டுமல்ல, முழு உலகமும் இன்று பெறும் நெருக்கடியில் உள்ளது” என்றும் அது குற்றம் சாட்டியுள்ளது.
“தப்லீக், தப்லீகி ஜமாத் மற்றும் இஜ்தேமாவிற்கு ஆதரவாக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ செயல்படும் தாருல் உலூம் தியோபந்த் மற்றும் பிஎஃப்ஐ (பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா) போன்ற நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் விஎச்பி கோரிகை விடுத்துள்ளது.