மத அவமதிப்பு செய்ததற்காக பொற்கோவிலில் ஒருவர் கொலை செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் இதே போல இன்னொரு சம்பவம் பஞ்சாபின் கபுர்தலாவில் நடந்துள்ளது
24 மணி நேரத்திற்குள் பஞ்சாபில் நடந்த இரண்டாவது சம்பவத்தில், கபுர்தலாவின் நிசாம்பூர் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு உள்ளூர் குருத்வாராவில் மத அவமதிப்பு செய்ததாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அந்த நபர் பீகாரில் உள்ள கோபால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி என்று உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
உள்ளூர் போலீசார் அவரை காவலில் எடுக்க முயன்ற போது, அந்த நபர் ஒரு குருத்வாராவில் உள்ள ஒரு அறைக்குள் அடைக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். குமப்லில் இருந்த ஒருவர் அவரை வாளால் குத்தியதாக கூறப்படுகிறது.
ஐஜிபி குர்பிந்தர் சிங் தில்லான் கூறுகையில், குருத்வாராவில் எந்த ஒரு மத அவமதிப்பு செயல் நடந்ததற்கான ஆதாரம் இல்லை என்றார்.
பஞ்சாபில் அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.