காஷ்மீர் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விவசாயம் துவங்கியுள்ளது.
ஜம்மு & காஷ்மீரில் உள்ள ஹிரா நகர் செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) பகுதியில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து கடுமையான துப்பாக்கிச் சூடு நடைபெற்றுக்கொண்டே இருந்ததால் இங்கு விவசாயம் செய்வது நிறுத்தப்பட்டு 20 ஆண்டுகள் ஆகின்றன. அன்றிலிருந்து 200 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலம் காலியாகவே உள்ளது.
ஆகஸ்ட் 5, 2019 அன்று, முந்தைய மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது பிரிவின் விதிகளை மத்திய அரசு ரத்து செய்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மறுசீரமைக்கப்பட்டது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதில் இருந்து, ஜம்மு & காஷ்மீரில் பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகள் குறைந்துள்ளன.
இந்நிலையில் எல்லை பாதுகாப்பு படையின் துணையுடன் இங்கே விவசாயப்பணிகள் துவங்கியுள்ளன.