கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை நீக்கக் கோரிய மனுவை கேரள உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்ததுடன், மனுவை “அற்பத்தனமானது” என்றும், “அரசியல் உள்நோக்கம் கொண்டது” என்றும் கூறி மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதமாக விதித்தது.
நீதிபதி பி வி குன்ஹிகிருஷ்ணன், ஆறு வாரங்களுக்குள் கேரள மாநில சட்ட சேவைகள் ஆணையத்தில் அபராதத்தொகையை டெபசிட் செய்யுமாறு மனுதாரருக்கு உத்தரவிட்டார்.
நாட்டு மக்களால் ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமரின் புகைப்படத்துடன் கூடிய கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழ் வழங்குவதில் என்ன தவறு உள்ளது என்பதை நீதிமன்றம் முன்பு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.