கர்நாடகா அரசு முதல் முறையாக மாநில காவல் துறையில் ஆட்சேர்ப்புக்கு திருநங்கைகள் விண்ணப்பங்களை கோரியுள்ளது.
கர்நாடகா சிவில் சர்வீசஸ் (பொது ஆட்சேர்ப்பு) விதிகள், 1977-ன் திருத்தத்தின்படி, திருநங்கைகளுக்கு ஒரு சதவீத வேலை வழங்குவதை எளிதாக்கும் வகையில், கர்நாடக காவல் துறை பல்வேறு பதவிகளுக்கு திருநங்கைகளிடமிருந்து விண்ணப்பங்களை கோரியுள்ளது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, கர்நாடக மாநில ரிசர்வ் போலீஸ் (கேஎஸ்ஆர்பி) சிறப்பு ரிசர்வ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிகள் நான்கு மற்றும் சிறப்பு ரிசர்வ் சப்-இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் உள்ள இந்திய ரிசர்வ் பட்டாலியனில் ஒரு பணி திருநங்கைகளுக்கு ஒதுக்கப்படும்.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) விதிகள் 2020 இன் படி, திருநங்கைகள் மாவட்ட ஆட்சியரிடம் சான்றிதழைப் பெற வேண்டும்.
இந்த அறிவிப்பை கூடுதல் காவல்துறை இயக்குநர் வெளியிட்டுள்ளார்.