இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் தவறான தகவல் நடவடிக்கையை தடுக்கும் முயற்சியில் இரண்டு இணையதளங்களையும் இருபது யூடியூப் சேனல்களையும் முடக்கப்பட்டதாக இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் டிசம்பர் 21 அன்று ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்த சேனல்கள் மற்றும் இணையதளங்கள் பாகிஸ்தானுடன் தொடர்புடையவை,காஷ்மீர், இந்திய ராணுவம், இந்தியாவில் உள்ள சிறுபான்மை சமூகங்கள், ராமர் கோவில், ஜெனரல் பிபின் ராவத் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தவறான தகவல்களை பரப்பி வந்தத்கவும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது