புதிய வகை வைரசான ஓமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கர்நாடக கோவிட்-19 தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (TAC) புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்கப்பரிந்துரைத்துள்ளது,
“பெங்களூரு மற்றும் ஒரு சில நகரங்களில் 30 டிசம்பர் 2021 முதல் 2 ஜனவரி 2022 வரை (இரவு 7:00 மணி முதல் காலை 5:00 மணி வரை) இரவு ஊரடங்கு விதிக்கப்படும்,” என்று நிபுணர் குழு பரிந்துரைத்தது. பப்கள், உணவகங்கள், கிளப்புகள் மற்றும் முக்கிய சாலைகள், மால்கள் மற்றும் பிற பொது இடங்களில் கிளப்களில் வழக்கமான செயல்பாடுகள் தொடரலாம் என்றாலும், ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களை அனுமதிக்கக் கூடாது என்றும் பரிந்துரைத்துள்ளது.
கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் போன்ற வழிபாட்டுத் தலங்களில் டிசம்பர் 22 முதல் ஜனவரி 2, 2022 வரை 50 சதவீத நபர்களை மட்டுமே அனுமதிக்கலாம் என்றும் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது. கோவில் குருக்கள் மற்றும் பாதிரியார்கள் நோய் தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்துள்ளது