விவசாயிகள் தற்கொலைக்கு முந்தைய அரசுகளின் கொள்கைகளே காரணம்: யோகி ஆதித்யநாத்

0
500

மாநிலத்தில் விவசாயிகளின் தற்கொலைகளுக்கு முந்தைய அரசாங்கங்களின் கொள்கைகளே காரணம் என்று உத்தரப் பிரதேச முதல்வர்  யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

      முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் 119வது பிறந்தநாளையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘விவசாயிகள் தின’ நிகழ்ச்சியில் பேசிய ஆதித்யநாத், இந்தியாவின் வளமைக்கு அதன் விவசாய வயல்களே வழி என்ற தனது நம்பிக்கையை பாஜக அரசு நிலைநிறுத்தி வருகிறது என்றார்.

    “முந்தைய அரசாங்கங்களின் விவசாயிகளுக்கு எதிரான அணுகுமுறை மற்றும் அறிவியலற்ற கொள்கைகள் விவசாயிகளை தற்கொலைக்குத் தூண்டியது. அவர்களில் பலர் விவசாயத்தை விட்டு விலகிவிட்டனர். உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, அவர்களின் 36,000 ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்தோம். ” என்று அவர் கூறினார்.

    விவசாயிகளுக்கான நரேந்திர மோடி அரசின் கொள்கைகள் அனைவரும் கவனிக்க வேண்டிய ஒன்று  என்றும் ஆதித்யநாத் கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here