இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை மியான்மருக்கு வழங்கிய வெளியுறவுதுறைச்செயலர்

0
376

  வெளியுறவுச் செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, டிசம்பர் 22 புதன்கிழமை, மியான்மர் செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு ஒரு மில்லியன் டோஸ் ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட’ தடுப்பூசிகளை வழங்கினார். ஷ்ரிங்லா இரண்டு நாள் பயணமாக மியான்மருக்கு புதன்கிழமை சென்றுள்ளார்.

    இந்த பயணத்தின்  மூலம், மியான்மரில் உள்ள இராணுவ ஆட்சியுடன் முறையான தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும்,கிழக்கே உள்ள அதன் முக்கியமான அண்டை நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்துவதற்கான முயற்சியாகவும் கருதப்படுகிறது.

      “இந்தப் பயணத்தின் போது, ​​வெளியுறவுச் செயலர், மாநில நிர்வாகக் குழு, அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவார்,” என்று ஒரு அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது.

      அக்டோபர் 2020 இல், எல்லைப் பகுதிகளில் ‘பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பராமரிப்பதில்’ ஒரு முக்கியமான வெற்றியாக, மியான்மர் “இந்திய கிளர்ச்சிக் குழுக்களின் 22 கேடர்களை இந்தியாவிடம்” ஒப்படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here