இமயமலை சிகரங்களில் ராணுவத்தில் உள்ள வீரர்களுக்கு அங்கே உள்ள குளிரைத்தாங்கும் பொருட்டு குளிர்கால ஆடைகள் தேவைப்படுகின்றன. தற்போது வரை அந்த ஆடைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. பாதுகாப்பு மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அப்படிப்பட்ட ஆடைகளை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளது. டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்த தொழில் நுட்பத்தை DRDO தலைவர் டாக்டர் ஜி. சதீஷ் ரெட்டி 5 இந்திய நிறுவனங்களுக்கு டிசம்பர் 27அன்று வழங்கினார். இந்த ஆடைகள் சுமார் 15 டிகிரி முதல் -50 டிகிரி வரையிலான தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றதாகும்