நாகப்பட்டினத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல அடுக்கு சுழற்சி காரணமாக நாகப்பட்டினத்தில் அதி கனமழையும்,10 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2 நாட்களுக்கு பின் மழை படிப்படியாககுறையும் என்றும் சில மாவட்டங்களில் மட்டும் லேசான மழை பெய்யும் என்றும் அது தெரிவித்துள்ளது.