ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பப்ட்டுள்ளன. அது போலவே மகாராஷ்டிரா தலை நகர் மும்பையிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடற்கரைகள்,பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் பரவலால் மும்பையில் மீண்டும் தொற்று நோய் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மும்பையில் நேற்று 3671 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். 190 பேர் ஒமிக்ரான் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.