பொங்கல் பண்டிகைகு இன்னும் சில தினங்களே உள்ளன. இதனை முன்னிட்டு திருச்சி அருகே உள்ள சூரியூரில் ஜல்லிக்கட்டு பயிற்சியாளர்கள் காளைகளை அடக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி அருகே உள்ள சூரியூரில் மாவட்ட நிர்வாகத்தின் வழி நடத்துதல் படி வரும் ஜனவரி 16 ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதே போல அலங்காநல்லூர்,பாலமேடு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இந்தியர்கள் மட்டும் இன்றி வெளிநாட்டினரும் இந்த போட்டிகளை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.