15-18 வயதுக்கு உட்பட்டோருக்கான தடுப்பூசி போடும் பணி துவங்கியது

0
265

15-18 வயதுக்கு உட்பட்டோருக்கான தடுப்பூசி போடும் பணி ஜனவரி 3ம் தேதி அன்று நாடு முழுவதும் துவங்கியது. இதனால் ஒரே நாளில் நேற்று ஒட்டுமொத்தமாக 1 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசி போடும் பணி சென்ற ஆண்டு ஜனவரி மாதம் துவங்கியது. முதற்கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோர்,முன்கள பணியாளர்கள், 45வயதுக்கு மேற்பட்டோர்,18-45 வயதுக்கு உட்பட்டோர் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. தற்போது 15-18 வயதுக்கு உட்பட்டோருக்கான தடுப்பூசி போடும் பணி நேற்று நாடு முழுதும் துவங்கியது. இதனால் ஒரே நாளில் நேற்று 1 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here