டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்து நிறுத்தங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் நெரிசலைத்தவிர்க்க டெல்லி மெட்ரோ மற்றும் பேருந்துகள் இனி 100 சதவீத இருக்கைகளை அனுமதிக்கும் என்றும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய தேவை இல்லாத டெல்லி அரசு மற்றும் நகராட்சி அதிகாரிகள் வீட்டில் இருந்தே பணி புரிய வேண்டும் என்றும் தனியார் துறை அலுவலகங்களில் 50 சதவீதம் ஊழியர்களை அனுமதிக்கலாம் எனவும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது.