வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு புதிய உந்து சக்தியாக மாறும் என பிரதமர் மோடி கூறினார்.
மணிப்பூர் மாநிலம் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அதனை முன்னிட்டு அங்கே பல வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, “இந்தியாவின் சுதந்திரத்திற்கான நுழைவாயில் என்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ராணுவம் முதன்முறையாக கொடி ஏற்றிய வடகிழக்கு மாநிலம். இப்போது புதிய இந்தியாவின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான நுழைவாயிலாக மாறி வருகிறது.” என்று கூறினார்.