பொங்கல் விழாவையும், பாதயாத்திரை செல்லும் பக்தர்களையும் முடக்கத் திட்டமா..?-இந்து முன்னணி தலைவர் அறிக்கை

0
585

இந்து முன்னணி தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:
கொரொனா பரவி வருவதை காரணம் காட்டி தமிழக அரசு வெள்ளி, சனி,ஞாயிறு மூன்று நாட்கள் கோயில்களை திறக்க தடை விதித்துள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல் பிரகாரம் என்று காரணம் சொல்கின்றது. ஆனால் மத்திய அரசு கடந்த 27. 12.2021 அன்று சுற்றறிக்கை அனுப்பி கட்டுப்பாடுகளை விதிக்குமாறு அறிவுறுத்தியது. ஆங்கில புத்தாண்டு முடியும்வரை இந்த அரசு காத்திருந்து நேற்று கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றது. குறிப்பாக இந்துக்கள் கொண்டாடும் போகிப் பொங்கல், காணும் பொங்கல், மாட்டுப் பொங்கல் நிகழ்ச்சிகள் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வருகின்றது. மேலும் தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளுக்கு தமிழகம் முழுவதும் பக்தர்கள் பாதயாத்திரையாக தற்போதும்,தைப்பூசத்திற்கும் வந்து கொண்டிருக்கின்றார்கள்.
தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல நூறு கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டு சாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றார்கள். திடீரென்று அரசு மூன்று நாட்கள் கோவில் திறப்புக்குத் தடை என்று அறிவித்தவுடன் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவார்கள். ஆகவே தமிழக அரசு பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு சமூக இடைவெளி ஏற்படுத்தி கட்டுப்பாடு விதித்து வழிபாடு செய்வதற்கு அனுமதிக்க வேண்டுமென்றும், தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவினை மக்கள் சிறப்பாகக் கொண்டாட வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி ஆவன செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here