திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு சொந்தமான காந்திமதி மேல்நிலை பள்ளி கொரோனா தடுப்பு மையமாக மாற்றுவதற்காக, பள்ளியில் 10, 11 12 படிக்கும் மாணவிகளை அருகிலுள்ள ரஹ்மானியா பள்ளிக்கு மாற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நெல்லையப்பர் கோவில் நிர்வாகத்தில் உள்ள பள்ளியில் பிரார்த்தனைகள் எல்லாம் இந்து முறைப்படி நடைபெறும்.
அந்த மாணவிகளையும் ஆசிரியர்களையும் இஸ்லாமிய பள்ளிக்கு அனுப்புவது எந்த வகையில் நியாயம்? மேலும் காந்திமதி மேல்நிலைப்பள்ளி பெண்கள் பள்ளி,ரஹ்மானியா பள்ளி ஆண்கள் பள்ளி. இதனாலும் பிரச்சினைகள் உருவாகும்.
பாளையங்கோட்டையில் எத்தனையோ கிறிஸ்தவ டயோசிசன் பள்ளிகள் இருக்கையில் மீண்டும் மீண்டும் ஏன் காந்திமதி பள்ளியை மட்டும் குறிவைத்து கொரோனா மையமாக அரசு மாற்றுகிறது.
இந்துத்திருக்கோயில் நிர்வாகத்தின் பள்ளி எடுப்பார் கைப்பிள்ளையா ?
இந்து பள்ளிப்பிள்ளைகளை இஸ்லாமிய பள்ளியில் பாடம் கற்க வைத்து மத பிரச்சினையை தூண்டுகிறதா மாவட்ட நிர்வாகம்?
மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது. இல்லையேல் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் இந்து முன்னணி தெரிவித்துள்ளது.