ஒருவர் மதம் மாறுவதை ஆட்சேபிக்கமுடியாது. ஆனால் கும்பலாக மதம் மாற்றுவது ஏற்றுக்கொள்ளமுடியாதது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி பாதிரியார் பி ஜார்ஜ் பொன்னையா, ஜூலை 2021 இல் அருமனையில் தனது வெறுப்புப் பேச்சுக்காகப் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, மற்றும் ‘பாரத மாதா’ ஆகியோரை அவமதித்ததற்காக பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாரத மாதா பலவேறு வடிவங்களில் குறிப்பிடப்படுகிறாள். இந்துக்களால் வழிபடப்படுகிறாள். எனவே பாரதமாதா மற்றும் பூமித்தாய் என்றும் கூறுவதை அசுத்தம் என்று பாதிரியார் சித்தரித்ததன் மூலம் இந்துக்களின் மத உணர்வுகளை புண் படுத்திவிட்டார் என்று கூறிய நீதிபதி இதை அரசாங்கம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.