ஜல்லிக்கட்டு:150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி-தமிழக அரசு அறிவிப்பு

0
591

ஜல்லிக்கட்டுக்கு 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தமிழக அரசு தெரிவத்துள்ளது.
பொங்கலை முன்னிட்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டுபோட்டிகளுக்கு பல்வேறு விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு.
• ஜல்லிக்கட்டு,மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளுக்கு 300 வீரர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்
• 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்
• வீரர்கள் மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ள அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்
• வீரர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
• வீரர்கள் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்று வைத்திருக்க வேண்டும்.
• வெளியூரில் வசிப்பவர்கள் போட்டிகளை தொலைகாட்சி மற்றும் இணைய தளம் வழியாக மட்டுமே காண அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here