திமுகவைச் சேர்ந்த முத்துராஜ் மற்றும் 5 பேர் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தியுள்ளனர். இவர்கள் அமைச்சர் ஐ பெரியசாமியின் தொகுதியான ஆத்துரைச்சேர்ந்தவர்கள். இவர்கள் அமைச்சர் ஐ பெரியசாமி படத்தை இருசக்கர வாகனத்தில் ஒட்டிக்கொண்டு, வாகனத்தின் பின்புறமும் திமுகவின் அடையாளத்தோடு வாகனத்தில் கஞ்சாவை வைத்துக்கொண்டு, பல இடங்களுக்கு டெலிவரி செய்துள்ளனர். மக்கள் சேவைக்கு பயன்படுகிறதோ இல்லையோ அமைச்சர் படம், கஞ்சா கடத்துவதற்கு பயன்பட்டிருக்கிறது.