10, ப்ளஸ்1, ப்ளஸ்2வுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆலோசனை

0
754

பொங்கல் பண்டிகைக்கு பின், 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கும் ‘ஆன்லைன்’ வகுப்புகளை நடத்துவது குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.கொரோனா நோய்தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 9வது வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2க்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெறுகின்றன. இதற்கிடையில் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2க்கும் நேரடி வகுப்புகளை ரத்து செய்துவிட்டு ஆன்லைன் வகுப்புகளை நடத்தவேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து பொங்கல் விடுமுறைக்குப்பின் ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாமா என பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்திவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here