”தேசிய போர் நினைவகத்தை ஒவ்வொரு இந்தியரும் காணவேண்டும்”-வெள்ளி மங்கை மீரா பாய் சானு கருத்து

0
284

இந்தியாவின் “வெள்ளி மங்கை” சாய்கோம் மீராபாய் சானு நேற்று டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவகத்துக்கு விஜயம் செய்தார்.
தியாகி மேஜர் லைஷ்ராம் ஜோதின் சிங் சமாதிக்கு சென்ற சானு, அவருக்கு அஞ்சலி செலுத்தினார். லைஷ்ராம் ஜோதின் சிங் அசோக சக்ரா விருது பெற்றவர்,மேலும் சானுவின் சொந்த மாநிலமான மணிப்பூரைச்சேர்ந்தவர்.
“பொதுவாகவே விளையாட்டு போட்டிகளின் போது டெல்லியில் தங்கும் நான் இந்த முறை போர் நினைவகத்துக்கு வந்துள்ளேன். இந்த இடம் ராணுவ வீரர்களுக்கு மட்டுமல்ல. ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை சேர்க்கக்கூடிய இடமாகும்.” என்று சானு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here