அமர் ஜவான் ஜோதி அணைக்கப்படவில்லை:மத்திய அரசு விளக்கம்

0
408

அமர் ஜவான் ஜோதி அணைக்கப்படவில்லை, அது தேசிய போர் நினைவகத்தில் உள்ள ஜோதியோடு இணைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அமர் ஜவான் ஜோதி அணைக்கப்பதுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து விளக்கமளித்துள்ள இராணுவம் அமர்ஜவான் ஜோதியில் உள்ள அணையா விளக்கு, தேசிய போர் நினைவு சின்னத்தில் அமைக்கப்பட்டுள்ள அணையா விளக்குடன் ஒன்றிணைக்கப்படுகிறது. இரண்டு அணையா விளக்குகளும் ஒன்று சேர்க்கப்படுகிறது. தேசிய போர் நினைவு சின்னத்தில் அணையா விளக்கு எரிந்து வரும் நிலையில், இந்தியா கேட் பகுதியில் அமர் ஜவான் ஜோதி விளக்கு தனியாக எரிய தேவையில்லை என்பதால், இரு விளக்குகளும்  ஒன்றாக இணைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here