பிரதமரிடம் விருது பெற்ற விருதுநகர் சிறுமி

0
620

தானியங்கி மிதக்கும் வீட்டினை கண்டுபிடித்தவிருதுநகர் சிறுமி விஷாலினி க்கு பிரதமர் மோடி, பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருதுடன் ரூ.1 லட்சம் பரிசு வழங்கி கவுரவப்படுத்தினார்.
புதுமை, சமூக அறிவியல், கல்வி, விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரம் மற்றும் துணிச்சலை வெளிப்படுத்தியதற்காக 29 குழந்தைகளுக்கு பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் (தேசிய குழந்தைகள் விருது) நேற்று வழங்கப்பட்டது. இதில் விஷாலினியும் ஒருவள்.
ஐதராபாத்தில் உள்ள அத்தாபூர் டில்லி ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸில் 2 ம் வகுப்பு படித்து வரும் விஷாலினி வெள்ள பேரிடர் காலங்களில் உயிர், உடமை காக்கும் வகையில் தானியங்கி மிதக்கும் வீட்டினை கண்டுபிடித்துள்ளார். இந்த சிறுமி
விருதுநகரை சேர்ந்த பேராசிரியர் நரேஷ்குமார், டாக்டர் சித்ரகலா தம்பதியரின் மகளாவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here