மத மாற்றம் குறித்து புகார் அளித்த நபர் கைது

0
229

தனது பகுதியில் மத மாற்றம் நடப்பதாக புகார் அளித்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கணேஷ் பாபு என்ற நபரை தமிழக போலீஸார் சனிக்கிழமை (ஜனவரி 29) அதிகாலை கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள திம்மியம்பட்டியை சேர்ந்தவர் கணேஷ் பாபு. இவர் தங்கள் பகுதியில் மதமாற்றம் நடப்பதாக இரண்டு பெண்கள் மீது புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

போலீசாரிடம் தெரிவிப்பதாக கணேஷ்பாபு அந்த பெண்களிடம் கூறியபோது, அருகில் உள்ள இருந்திரப்பட்டி, மேட்டுப்பட்டி, கட்டக்குட்டி ஆகிய கிராமங்களில் நீண்டகாலமாக இதை செய்து வருவதாகவும் தங்கள் மீது எந்த ஒரு காவல் துறை நடவடிக்கையும் எடுக்க முடியாது எனகூறினர். மேலும் அவர்கள் கணேஷ்பாபுவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here