பல ஆண்டுகளாக நக்சல்கள் செயல்படும் மற்றும் வன்முறையில் ஈடுபடும் பகுதிகளின் எண்ணிக்கை 126 மாவட்டங்களில் இருந்து தற்போது 70 ஆகக்குறைந்துள்ளதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய கோவிந்த், பல தசாப்தங்களாக நீடித்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகளை குறிப்பிட்டு பேசினார்.