மதத்தை பின்பற்ற யாரும் பள்ளிக்கு வரக்கூடாது என கர்நாடகா உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா கூறியுள்ளார். பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் ஹிஜாப் (தலை முக்காடு) அல்லது காவி சால்வை அணியக் கூடாது, அவர்கள் பரிந்துரைக்கப்பட்ட சீருடையை மட்டுமே அணிய வேண்டும் என்றும் கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா வியாழக்கிழமை கூறியுள்ளார். உடுப்பியில் உள்ள அரசு PU கல்லூரி மாணவர்கள் சிலர் வகுப்பறையில் ஹிஜாப் அணிந்து வந்தது சர்ச்சையானது.இந்த சூழ்நிலையில் கர்நாடக அமைச்சர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார்.