புகழ் பெற்ற பாடகி லதா மங்கேஷ்கர் காலமானதைத்தொடர்ந்து கோவா சட்டப்பேரவைதேர்தலில் பிரதமர் மோடியின் தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தில் இரண்டு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியீடும்,மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் தேர்தல் கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வரும் 14 ம் தேதியன்று மாநிலத்தில் தேர்தல் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.