புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கர் தனது 92 ஆவது வயதில் மும்பையில் காலமானார். அவரது இறுதி சடங்குகள் மும்பையில் உள்ள சிவாஜி பார்க் மைதானத்தில் முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றன. அரசியல் கட்சி தலைவர்கள், விளையாட்டு வீரர்கள்,திரைப்பட பிரபலங்கள் அவருடைய இறுதி சடங்கில் கலந்து கொண்டு பாடகிக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.