உபியில் ராமாயண பல்கலைகழகம் நிறுவப்படும்: பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

0
202

உத்தரபிரதேசத்தில் ராமாயண பல்கலைகழகம் நிறுவப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் வரும் 10ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதற்கென பிப்ரவரி 6 ம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படுவதாக இருந்தது. லதா மங்கேஷ்கர் காலமானதைத்தொடர்ந்து அது இன்று வெளியிடப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் உபி முதல்வர் ஆகியோர் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டனர். தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
*அயோத்தியில் ராமாயண பல்கலைக்கழகம் நிறுவப்படும்.
*மாநிலம் முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்.
*ஹோலி, தீபாவளிக்கு 2 காஸ் சிலிண்டர்கள் இலவசம்.
*உ.பி.யில் மா அன்னபூர்ணா கேண்டீன் அமைக்கப்படும். இதில் ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவு வழங்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here