“ஹுண்டாயைபுறக்கணிப்போம்” என்னும் வாசகம் டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஹுண்டாய் கார் நிறுவனத்தின் பாகிஸ்தான் கிளை “காஷ்மீர் காஷ்மீரிகளுக்கே” என்பது போன்ற வாசகங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தது. மேலும் “காஷ்மீர் சகோதரர்களின் தியாகங்களை நினைவு கூர்வோம்’.அவர்களின் சுதந்திரப்போரட்டதில் அவர்களுக்கு துணை நிற்போம் என்றும் பதிவிட்டு இருந்தது.இதனைத்தொடர்ந்து “ஹுண்டாயைபுறக்கணிப்போம்” என்ற வாசகம் டிவிட்டரில் வைரலாகி வருகிறது.