ராமாயண யாத்திரை ரயில்: பிப்ரவரி 22 அன்று புறப்படுகிறது

0
552

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ரயில்வே கேட்டரிங் & டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் (IRCTC), ஸ்ரீ ராமரின் வாழ்க்கையை மையமாக வைத்து ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக பிரபலமான “ஸ்ரீ ராமாயண யாத்ரா” டீலக்ஸ் ஏசி டூரிஸ்ட் ரயிலை இயக்க முடிவு செய்துள்ளது. . பிப்ரவரி 22, 2022 அன்று டெல்லி சஃப்தர்ஜங் ரயில் நிலையத்தில் இருந்து தொடங்கும் இந்த ரயில் பயணம், ராமரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய முக்கிய இடங்களை உள்ளடக்கும். 20 நாட்கள் கொண்ட “ஸ்ரீ ராமாயண யாத்ரையில் கீழ்கண்ட ஊர்கள் அடங்குகின்றன.
அயோத்யா, நந்திக்ராம்-பரதன் கோவில், சீதாமர்ஹி(பீகாரில் உள்ள சீதை பிறந்ததாக சொல்லப்படும் இடம்), ஜனக்பூர்(நேபாளம்), பக்சர், வாரணாசி,பிரயாகை,சிருங்கிபேரபுரம்,சித்ரகூட், நாசிக்(த்ரயம்பகேஸ்வரர் ஆலயம்),பஞ்சவடி, ஹம்பி, ராமேஸ்வரம்,தனுஷ்கோடி,காஞ்சிபுரம், பத்ராசலம் ஆகிய ஊர்களுக்கு இந்த ரயில் செல்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here