சிங்கபூரில் நடைபெற உள்ள கண்காட்சியில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் விமானங்கள் காட்சி படுத்தப்பட உள்ளன.
சிங்கப்பூரில் வரும் 15 முதல் 18 ம் தேதி வரை சர்வதேச விமான கண்காட்சி நடைபெற உள்ளது. தங்கள் தயாரிப்புகளை கட்சி படுத்த உலக நாடுகளுக்கு இது ஒரு வாய்ப்பாக அமையும். இந்த கண்காட்சியில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மூன்று தேஜஸ் விமானங்கள் பங்கு பெற உள்ளன. இதற்காக இந்திய விமானப்படையைசேர்ந்த 44 விமானிகள் சிங்கப்பூர் சென்றடைந்தனர்.