ஹிஜாப் சர்ச்சை குறித்த இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்புக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்ட கருத்துக்கள் தவறாக வழி நடத்துபவை என்று வெளியுறவுத்துறை செயலாளர் அரிந்தம் பக்சி கூறியுள்ளார். அவர் இது குறித்து கூறுகையில் இந்த விவகாரம் நீதி மன்றத்தில் உள்ளது,மேலும் இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்,இதில் வெளிநாடுகள் தலையிடுவது தேவையற்றது என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவின் அரசியலமைப்பு நெறிமுறைகளுக்குள்ளேயே இதை தீர்த்துக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கருத்து வெளியிட்டதன் மூலம் தனது மதிப்பை தானே குறைத்துகொண்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.