பாகிஸ்தானில் தொடரும் அவலம்; கிறிஸ்தவ வாலிபர் படுகொலை

0
207

பாகிஸ்தானில் பாட்டு சத்தம் அதிகம் என கூறியதற்காக கிறிஸ்தவ வாலிபர் படுகொலை செய்யப்பட்ட அவலம் நடந்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் முஸ்லிம்கள் தவிர்த்து பிற மதத்தினர் சிறுபன்மையினராக உள்ளனர். 2017ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்துக்கள் மிக பெரிய சிறுபான்மை மதத்தினராக உள்ளனர்.

இதனை தொடர்ந்து, கிறிஸ்தவர்கள் 2வது பெரிய சிறுபான்மை மதத்தினராக உள்ளனர். பாகிஸ்தானில் சிறுபான்மை சமூக மக்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்ந்து வருகிறது.
பஞ்சாப் மாகாணத்தில் லாகூர் நகரில் வால்டன் என்ற பகுதியில் வசிக்கும் கிறிஸ்தவர் பர்வேஸ் மசீ. இவருக்கு வயது 25.
தனது அண்டை வீட்டாரான சோனி மாலிக் என்பவரிடம் இசையின் சப்தம் அதிகம் இருக்கிறது. அதனால், ஒலியை சற்று குறைக்கும்படி கேட்டு கொண்டுள்ளார். இதில் காரசார மோதல் ஏற்பட்டு மோதல் முற்றியதில் மாலிக் மற்றும் அவருடன் சேர்ந்த கும்பல், பர்வேசின் உறவினரான சோபல் மசீ என்பவரை தாக்கியுள்ளனர். இதில் அவர் காயமடைந்து உள்ளார்.
மேலும் மாலிக் மற்றும் சிலர் அடங்கிய கும்பல் பர்வேசை செங்கற்கள் மற்றும் ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் சம்பவ பகுதியிலேயே பர்வேஸ் உயிரிழந்து உள்ளார். அந்த கும்பல் வானை நோக்கி துப்பாக்கியாலும் சுட்டுள்ளனர். உயிரிழந்த பர்வேசுக்கு 7 சகோதரிகள் உள்ளனர்.

இதனை தொடர்ந்து, அந்த பகுதியில் கிறிஸ்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யும்படி வலியுறுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here