முன்னாள் பிஹார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மீது ஊழல் குற்றத்திற்காக பல வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடந்தது. சில நாட்களுக்கு முன்பு சி.பி.ஐ. நீதி மன்றம் விசாரித்த 5 வது வழக்கில் லாலுவை குற்றவாளி என அறிவித்து. அக்குற்றத்திற்கான தண்டனையாக 5 வருட சிறை தண்டனையுடன் ரூ.60 லட்சம் தண்டனைத் தொகையாக செலுத்த வேண்டும் என இன்று பாட்னா சி.பி.ஐ. நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த வழக்கை தொடுத்தவர பா.ஜ.க. மாநிலங்கள் அவை உறுப்பினர், முன்னாள் பீஹார் மாநில துணை முதல்வர் சுஷில் குமார் மோடி ஆவார்.
ஊழல் வழக்குகளில் சிறை தண்டனை பெற்ற லல்லு சிறையில் இருக்க வில்லை. தனது வயது உடல் நல இயலாமை போன்ற காரணங்களைக் காட்டி மருத்துவமனைகளிலும், சகல வசதிகளுடன் சொகுசு பங்களாவிலும் தான் தண்டனையைக் கழித்து வருகிறார். அதேபோல் தான் இந்த தண்டனையும் இருக்கும்.