உக்ரைன்: உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கி உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசில் 35 நிமிடங்கள் பேசினார்.
உக்ரைனில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற உதவியதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். சுமி நகரில் உள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் தொடர்ந்து உதவிடவும் பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யா: உக்ரைன் மீதான தாக்குதல் தொடர்பாக ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் 50 நிமிடம் பேசினார். உக்ரைன் அதிபருடன் நேரடியாகப் பேச்சு நடத்தும் படி புடினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
சுமி உட்பட உக்ரைனின் சில நகரங்களில் மனிதாபிமான அடிப்படையில் போர்நிறுத்தம் செய்யப்பட்டதை பிரதமர் மோடி பாராட்டினார்.