சென்னை பாடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றுபவர் சிவசங்கரி. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் இவர் இதுவரை 2 லட்சத்து 306 கொரோனா தடுப்பூசிகள் போட்டுள்ளார்.
தேசிய அளவில் சாதனை படைத்த இந்த இரண்டு நர்சுகளுக்கும் டெல்லியில் சுகாதாரத்துறை சார்பில் நேற்று நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட்டது.
சிவசங்கரி 30 ஆண்டுகளாக சுகாதாரத்துறையில் பணியாற்றி வருகிறார். கொரோனா தடுப்பூசி அறிவிக்கப்பட்டதும் கடந்த 2021-ம் ஆண்டு முதல் தடுப்பூசி முகாம்களிலும் வீடு வீடாக சென்றும் ஊசி செலுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் குறிப்பிடதக்கது.