நேட்டோவில் இணையும் விருப்பத்தை கைவிட்டுவிட்டோம்: உக்ரைன்கிரீமியா தீபகற்பத்தை ரஷியப் பகுதியாகவும் கிளா்ச்சியாளா் கட்டுப்பாட்டுப் பகுதிகளை தனி நாடுகளாகவும் அங்கீகரிப்பது குறித்து ரஷியாவுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக இருப்பதாக விளாடிமிர் செலென்ஸ்கி கூறினார்.
நேட்டோவில் இணையப் போவதில்லை என்று உத்தரவாதம் அளிப்பது, கிளா்ச்சியாளா் பகுதிகளை தனி நாடுகளாக அங்கீகரிப்பது உள்ளிட்ட தங்களது நிபந்தனைகளை உக்ரைன் நிறைவேற்றினால் அந்த நாட்டின் மீதான தாக்குதல் உடனடியாக நிறுத்தப்படும். ரஷியா திங்கள்கிழமை அறிவித்திருந்த நிலையில் ஸெலென்ஸ்கி இவ்வாறு கூறியுள்ளார்.
நேட்டோ அமைப்பில் உக்ரைனைச் சோ்க்கும் விருப்பத்தைக் கைவிட்டுவிட்டதாக அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.