யோகி ஆதித்யநாத்தின் முத்தான சாதனைகள்!

0
422

உத்தரபிரதேசத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ள யோகி ஆதித்யநாத், ஏழு சாதனைகளை படைத்துள்ளார்.
* மாநிலத்தில் முழுமையாக ஐந்து ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்த பின், தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்க உள்ள முதல் நபர், யோகி ஆதித்யநாத் தான்.
*இரண்டாவது முறையாக பதவியேற்கும் ஐந்தாவது முதல்வர் யோகி ஆதித்யநாத். மாநிலத்தில் இதற்கு முன் 1957ல் சம்புரானந்தா; 1962ல் சந்திரபானு குப்தா; 1974ல் எச்.எம்.பகுகுணா; 1985ல் என்.டி.திவாரி ஆகியோர் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ளனர். ஆனால், யோகியை தவிர இவர்கள் நால்வரும் முதல் முறை, ஐந்து ஆண்டுகள் முழுமையாக முதல்வராக இருக்கவில்லை
*1985ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக என்.டி.திவாரி முதல்வராக பதவியேற்றார். 37 ஆண்டுகளுக்கு பின், தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்கும் முதல்வர் என்ற சாதனையை யோகி படைத்துள்ளார்
** மாநிலத்தில் மூன்று முதல்வர்கள் மட்டுமே, முழுமையாக ஐந்து ஆண்டு காலம் பதவி வகித்துள்ளனர். 2007 – 12 வரை மாயாவதியும், 2012 – 17 வரை அகிலேஷ் யாதவும், 2017 – 22 வரை யோகி ஆதித்யநாத்தும் முழுமையாக ஐந்து ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here