ஒவ்வொரு ஆண்டும் ஆர்.எஸ்.எஸ். ல் இணையும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

0
372
ஸ்ரீ மன்மோகன் வைத்யா
கர்ணாவதி

ஆர்.எஸ்.எஸ்.ன் அகில பாரத பிரதிநிதி சபா (தேசிய பொதுக்குழு) குஜராத் மாநிலம் கர்ணாவதியில் (அஹமதாபாத்)  துவங்கியது. நாடு முழுவதிலும் இருந்து 1248 நிர்வாகிகள் பங்கேற்றனர்.  ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஸ்ரீ மோகன் பாகவத் மற்றும் அகில பாரத பொதுச் செயலாளர் ஸ்ரீ தத்தாத்ரேய ஹொசபலே நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். அகில பாரத இணை செயலாளர் மன்மோகன் வைத்யா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது

  1. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கொரோனா காரணமாக நின்று போன சங்கப் பணிகளில் 98.6% மீண்டும் துவங்கியுள்ளன
  2. தினசரி ஷாகாக்களில் 61% மாணவர்களுக்கானவை, 39% பெரியவர்களுக்கானவை
  3. சங்க கணக்கில் 6506 கண்ட உள்ளது. இவற்றில் 84% கண்ட வில் ஷாகா நடைபெறுகிறது.
  4. 59000 மண்டல் களில் 41% மண்டலங்களில் ஷாகா நடைபெறுகிறது
  5. 2303 நகரங்களில் 94% நகரங்களில் ஷாகா நடைபெறுகிறது
  6. அடுத்த 2 வருடங்களுக்குள் அனைத்து நகரங்களிலும் ஷாகா நடைபெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
  7. கொரோனாவின் போது சமுதாயத்துடன் இணைந்து, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பணியாற்றினார்கள். நாடு முழுவதும் 5.50 லட்சம் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் இப்பணியில் ஈடுபட்டார்கள்
  8. சங்கத்தின் குடும்ப விழிப்புணர்வு நிகழ்ச்சி, பசுப் பாதுகாப்பு, கிராம முன்னேற்றம் உள்ளிட்ட பணிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here