மது விலக்கை அமல்படுத்தக்கோரி மதுக்கடை மீது கல்வீசிய பா.ஜ., தலைவர்

0
191

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பா.ஜ., ஆட்சி நடந்து வருகிறது. அங்கு மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த பா.ஜ., தலைவருமான உமா பாரதி வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி உமா பாரதி போராட்டத்தில் இறங்கியுள்ளார்.

ம.பி., தலைநகர் போபால் மாவட்டத்தில் உள்ள ஆசாத் நகரில் அமைந்துள்ள மதுக்கடை ஒன்றில் கல்வீசியுள்ளார். இந்த வீடியோவை அவரே பகிர்ந்தும் உள்ளார். உமா பாரதி கல் வீசுகையில், அவரைச் சூழ்ந்திருந்த தொண்டர்களும் கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.சாலைகளில் அமர்ந்து இவர்கள் குடிப்பதால், வீதிகளில் செல்லும் பெண்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here