உலகத் தலைமை ஏற்கும் பாரதம்

0
381

எட்டாவது சர்வதேச யோகா தினத்திற்கு நூறு நாட்கள் இருக்கும் நிலையில், ‘யோகா மகோத்சவம் என்னும் 100 நாள் கௌன்ட் டௌன்’ நிகழ்ச்சியை மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தொடங்கிவைத்தார். ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங், மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ், மற்றும் இணையமைச்சர்கள் டாக்டர் முன்ஜ்பாரா மகேந்திரபாய், மீனாட்சி லேகி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு சர்வதேச யோகா தின இயக்கம், உலகம் முழுவதும் 100 நாள் மையப்பொருள், 100 நகரங்கள், 100 அமைப்புகள் என வரும் ஜூன் 21 வரை நடைபெறும். 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவைக் குறிக்கும் வகையில், இந்த ஆண்டு 75 பாரம்பரிய, கலாச்சாரப் பெருமை கொண்ட 75 நகரங்களில் ஜூன் 21ம் தேதி யோகா நிகழ்ச்சிகள் நடைபெறும். நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால், யோகா மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் உலகத்தலைமை ஏற்கும் உயரிய நிலையில் பாரதம் உள்ளது. உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவத்துக்கான உலக மையம் பாரதத்தில் அமைக்கப்படவுள்ளது’ என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here