நாட்டில், 12 – 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, முதல் நாளிலேயே மூன்று லட்சத்திற்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி ‘டோஸ்’கள் செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டில், கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு இரண்டு டோஸ்களாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் முதல், 12 – 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியது.
முதல் டோஸ் செலுத்திய குழந்தைகளுக்கு, 28 நாட்கள் இடைவெளிவிட்டு, இரண்டாவது டோஸ் செலுத்தப்படும். இதுவரை நம் நாட்டில் மொத்தமாக, 180.80 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.உலக நாடுகளில், கொரோனாவின் இரண்டாம் அலையை காட்டிலும், ஒமைக்ரான் வகை வைரசால் ஏற்பட்ட மூன்றாம் அலை, ஆறு மடங்கு வேகமாக பரவி பாதிப்புகளை ஏற்படுத்தியது.எனினும், இந்தியாவில் மூன்றாம் அலையால் பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.