ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க, பொதுத் துறை நிறுவனங்களுக்கு தேவையான ஊக்குவிப்பு அளிக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றி வலியுறுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டில் ராணுவ தளவாடங்கள் தயாரிப்பில் தனியார் பங்களிப்பை அதிகரிக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் பயனாக, கடந்த ஐந்து ஆண்டுகளில், ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி ஆறு மடங்கு உயர்ந்து, 1,500 கோடியில் இருந்து, 9,000 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இதில், தனியார் துறையின் பங்கு, 90 சதவீதத்திற்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தியா, 84 நாடுகளுக்கு ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்கிறது. இதையடுத்து, ‘டாப் 25’ நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பிடித்துள்ளதாக, ஸ்டாக்ஹோம் சர்வ தேச அமைதி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.