நீதிபதிகளுக்கே கொலை மிரட்டல் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகி கைது.

0
441

அதிராம்பட்டினத்தில், ஹிஜாப் தடை விவகார தீர்ப்பை கண்டித்து, நடந்த ஆர்பாட்டத்தில், பிரதமர் மோடி, நீதிபதிகள் குறித்து அவதுாறாக பேசிய, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஹிஜாப் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கண்டித்து , தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் அதிராம்பட்டினத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் திருநெல்வேலியை சேர்ந்த மாநில பேச்சாளர் ஜமால் முகமது உஸ்மானி,43, ஹிஜாப் குறித்து தீர்ப்பு வழங்கிய கர்நாடகா ஐகோர்ட் நீதிபதிகள் குறித்து அவதுாறாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும், பிரதமர் மோடியை துாக்கிலிட வேண்டும், மத கலவரத்தை துாண்டு விதமாகவும் பேசினார்.இது தொடர்பாக ஏரிப்புறக்கரை வி.ஏ.ஓ. கெளரிசங்கர் அதிராம்பட்டினம் போலீசில் புகார் அளித்தார். பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜமால் முகமது உஸ்மானியை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here