சி.பி.ஐ.,க்கு பிரதமர் வேண்டுகோள் ||” ஊழலற்ற இந்தியாவாக மாற்றுங்கள் “

0
72

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ், சிபிஐ அமைப்பு கடந்த 1963ம் ஆண்டு துவங்கப்பட்டது. சிபிஐ.,யின் 60ம் ஆண்டு விழா (வைர விழா) டில்லியில் இன்று (ஏப்ரல் 3) நடைபெற்றது.
இதில் பிரதமர் பங்கேற்று பேசியதாவது: சிபிஐ சாதாரண குடிமகனுக்கு நம்பிக்கையையும் பலத்தையும் அளித்துள்ளது. நீதிக்கான முத்திரையாக சிபிஐ உருவெடுத்துள்ளதால், தீர்க்கப்பட முடியாத வழக்குகள் சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என இன்றைக்கும் குரல் எழுகிறது.
இந்தியாவை ஊழலற்ற நாடாக மாற்றுவதில் சிபிஐ.,க்கு பங்குண்டு. 10 ஆண்டுகளுக்கு முன்பு ஊழல் செய்வதில் போட்டி நிலவியது. அந்த நேரத்தில் பெரிய ஊழல்கள் எல்லாம் நடந்தன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் பயப்படவில்லை. 2014க்குப் பிறகு, ஊழல், கருப்புப் பணத்திற்கு எதிராக தொலைநோக்குடன் நாங்கள் (பா.ஜ., அரசு) செயல்பட்டோம். நீங்கள் (சிபிஐ) யாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறீர்களோ, அவர்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்கள் என்பதை நான் அறிவேன். அவர்கள் பல ஆண்டுகளாக அரசாங்கத்தின் ஒரு அங்கமாக உள்ளனர்.
அவர்கள் சில மாநிலங்களில் ஆட்சியில் உள்ளனர், விமர்சனங்கள் வரும் கண்டு கொள்ளாதீர்கள். நீங்கள் (சிபிஐ) உங்கள் வேலையில் கவனம் செலுத்த வேண்டும், ஊழல்வாதிகள் யாரும் தப்பிவிடக்கூடாது என்பதே நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் விருப்பம். இவ்வாறு பிரதமர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here