விளையாட்டுகளில் குழந்தைகளின் மேம்பாடு

0
196
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கல்வித் துறை இணையமைச்சர் அன்னபூர்ணா தேவி, ‘தேசிய பாடத்திட்டச் செயல்முறையின்படி சுகாதாரம் மற்றும் உடற்பயிற்சிக் கல்வி, ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை கட்டாயப் பாடம். இவை குறித்த ஆசிரியர் கையேடு மற்றும் பாடப்புத்தகங்களை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு கொண்டு வந்துள்ளது. கூடுதலாக, முறைப்படுத்தப்பட்ட, நன்கு வடிவமைக்கப்பட்ட சுகாதாரம் மற்றும் உடற்பயிற்சிக் கல்வி திட்டத்தை சி.பி.எஸ்.இ அறிமுகப்படுத்தியுள்ளது. 1 முதல் 12ம் வகுப்பு வரை சுகாதாரம், உடற்பயிற்சிக் கல்விப் பாடங்களை சி.பி.எஸ்.இ கட்டாயமாக்கி உள்ளது. ஒரு நாளுக்கு ஒரு வகுப்பை சுகாதாரம், உடற்கல்வி பாடங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. மாணவர்கள் அவர்களது விருப்பம், திறமைக்கு ஏற்றவாறு குறைந்தபட்சம் இரண்டு விளையாட்டுகளில் கட்டாயமாகக் கலந்து கொள்ள வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்களின் உடல் உறுதி, ஆரோக்கியத்திற்குத் தேவையான கொள்கைகள், செயல்முறைகளைப் பின்பற்ற கல்வி நிலையங்களை இந்த வழிகாட்டுதல்கள் ஊக்குவிக்கின்றன’ என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here